கடந்த கிழமை பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஊழல் சம்பந்தமான தகவலுக்கு அது சம்பந்தப்பட்டவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்ட கருத்தானது திராணி இருந்தால் இங்கே காட்டவும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இங்கு யாருக்கு திராணி வேண்டும் என்று பொதுமக்களாகிய நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால் அவர் தன் மீது குற்றமில்லை என்று கூறும் பொழுது அதற்கான சாட்சிகளை அத்தாட்சிகளை வெளியிடுவதன் மூலம் தன்னைக் கூட்டமைத்தவர் என்று நிரூபித்துக் கொள்ளலாம். அதை விடுத்து உங்களை இருக்கும் ஆதாரங்களை வெளியுலகுக்கு காட்ட முடியுமா என்று கேள்வி கேட்டு ஆதாரங்களை வைத்து அதிலிருந்து தப்பிக் கொள்ளும் முயற்சியாக அழைப்பு விடுக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றமற்றவர் என்ற நிலையில் கடந்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கான வங்கிக் கணக்கினை வெளியுலகுக்கு காட்டுவதன் மூலம் தான் குற்றமற்றவர் என்றும் திராணி உடையவர் என்றும் காட்டிக் கொள்ள முடியும். தமிழர்களுடைய பழமொழியில் நெருப்பு இல்லாமல் புகைக்காது என்று கூறுவார்கள். அதேபோல புகையிட புகை இருக்கும் இடத்தில் தான் நெருப்பும் இருக்கும். உங்களை நீங்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்க இதுவே ஒரு தருணமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்
No Comments Yet...