இலங்கையில் தற்போது நிலவிவரம் சூழ்நிலையில் புதிய அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தினை நிறுத்தி உள்ளதா? நாட்டில் அனைத்து மக்களும் சுபிட்சமான முறையில் வாழ்ந்திட நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் மாற்றப்பட வேண்டும். பயங்கரவாத சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அனைத்து மக்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் இதுவே மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும். ஒரு சமுதாயம் ஒரு தனி மனிதனில் இருந்து ஆரம்பிக்கிறது என்றால் அதற்கு உதாரணம் இலங்கை ஜனாதிபதி ஆக இருக்க வேண்டும் அவரின் தனிப்பட்ட செயல்களில் அன்றி அரசியல் செயல்பாடுகளும் இதற்கு ஒரு பெரிய உதாரணமாக அமைய வேண்டும். பயங்கரவாத சட்டத்தில் இதுவரை வழக்குகள் பதியப்பட்டு தண்டிக்கப்படாமல் கூட்டம் நிரூபிக்கப்படாமல் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். திருடர்களை பிடிக்கும் அரசியல் தந்திரபாயங்களை தவிர்த்து, உண்மையான ஒரு நேர்மையான அரசியல் நோக்கோடு குற்றவாளிகளை கண்டுபிடித்து அதற்கான நடவடிக்கையை எடுப்பாராயின் அது வரவேற்கத்தக்கது.
No Comments Yet...