தற்போது இடம் பெற்ற அரசியல் கைது மக்களை ஏமாற்றும் ஒரு அரசியல் நோக்காகவே இருக்கிறது. பல வாக்குறுதிகளை முன் வைத்து பதவிக்கு வந்த ஜனாதிபதி அவ்வாக்குறுதிகளை காப்பாற்ற இதுவரை செய்த விடயங்களை பார்த்தால் நூற்றில் பத்து மடங்கு தான்அவற்றை செய்து உள்ளார். அதுவும் சாதாரண சட்டம் மாற்றங்கள் மூலம் தான். முன்னாள் ஜனாதிபதி குடும்பத்தால் கையாடப்பட்ட 2 பில்லியன் அமெரிக்கன் டாலர்களை எப்படி நாட்டுக்கு திருப்பி எடுப்பது என்று என்றும் அதனால் இலங்கையின் கடனை நிறைவு செய்வதற்கு உதவும் வகையில் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி எடுத்திருக்கின்ற நடவடிக்கை ஆனது ஒரு கண் துடைப்பு நிகழ்வாகவே கருதப்படுகிறது. தமிழர்களைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட பணத்தினையும் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடனாகவே கருதப்படுகிறது. அக்கடனைக் கூட கொல்லப்பட்ட மக்களால் தான் கட்ட வேண்டிய நிலைமை தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளது. அன்றாடம் உணவுக்கு போராடும் மக்களை இந்த கடன் தாக்கம் மிகவும் மேலும் தொல்லையில் ஈடுபடுத்தியுள்ளது. திருடர்கள், அபகரித்தவர்கள் சுதந்திரமாக உலகெங்கும் சுற்றி தெரியும் பொழுது சாதாரண மக்கள் இதற்கான வலுவினை சுமக்கின்றார்கள். சர்வதேச வாங்கியின் ஆலோசனைகிணங்க இலங்கையில் பல சட்ட மாற்றங்கள் ஏற்படுத்தி அதன் மூலம் இருக்கும் கடனை நிவர்த்தி செய்ய இலங்கை அரசாங்கம் உட்பட்ட போதும் அதற்கான காலங்கள் ஓரெண்டு ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும். சட்ட மாற்றம் என்பது பொதுமக்களை சென்றடையும் போது அது அவர்களுக்கு ஒரு பளு ஏற்படாத வண்ணம் இருத்தல் வேண்டும். 400 ஆண்டுகளாக அடிமைப்பட்டிருந்த இலங்கை மக்கள் சுதந்திரம் கிடைத்த மின்னரும் வல்லாதிக்க அரசினால் அடிமைப்பட்டு இருந்த காலங்களிலும் பார்க்க தற்போது இருக்கும் பொருளாதார நிலை மிகவும் துன்பகரமானது.
No Comments Yet...